Saturday, February 6, 2010
பந்தாடப்பட்ட Prefects . . .
மாணவர்களுக்கோ கட்டுப்படுத்தப்படுவது பிடிப்பதில்லை
அதிபர், ஆசிரியர்களோ கட்டுப்பாடு தேவை என்பார்கள்
இருதலைக் கொல்லி எறும்புகளாய் இந்த இரு பிரிவினருக்கும்
நடுவே பந்தாடப்பட்டதோ Prefects நாம் தான் . . .
எந்த வகுப்பை மேய்ப்பதும் கடினம் - அதிலும்
எமது நண்பர்களின் வகுப்பை மேய்ப்பது உலகமகா கஷ்டம்
எம் கஷ்டம் அவர்களுக்கோ வெகு வெகு இஷ்டம் . . .
வந்தவுடனேயே "வந்து விட்டாயா வா" என நக்கல் பார்வைகள்
அமைதியாகச் சொல்கையில் தாம் பேசவில்லையாம் வாயால்
என போக்குக் காட்டி விட்டு கண்ணாலும், சிரிப்பாலும் ஒரு
சரித்திரமே படைப்பார்கள் நம் முன்னே மிக இலகுவாய் . . .
இதற்கும் அஞ்சிடாது எம் கடமையைப் பார்க்கத் துணிகையில்
அன்பாய் தான் காட்டுவார்கள் தாம் எம் எதிரிகள் என்று
என்ன இது அன்பான ஆபத்தெனப் பார்க்கையில் . . .
ஓரொருவர் பட்டியிலே ஊசி, கூந்தலிலே ரப்பர் பேண்ட்,
காலணியில் வெண்மைக் குறைவு, சீருடையோ குட்டை,
இரண்டாய்ப் பிடித்துக் கட்டாத நீளக் கூந்தல்,
வெட்ட மறந்து நீளமாய் வளர்ந்த நகங்கள் . . .
இப்போது கூறுங்கள் யார் பாவப்பட்டவர்கள் . . . ? ? ?
Prefects பிடிக்காதவர்களா . . . ? ? ?
அன்றி பாவப்பட்ட Prefects கூட்டமா . . . ? ? ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment