Wednesday, February 3, 2010
மறக்க முடியுமா . . .
ஊடல்களின் போது இரு வேறு அணிகளாய்ப் பிரிவதும்
சிறு காகிதத்தில் உள்ளக் குமுறல்களை கிறுக்கி அனுப்புவதும்
கூடல்களில் இனியொரு பிரிவில்லையென சபதமுரைப்பதும்
ஒருவருக்கொருவர் பட்டப் பெயர் வைத்து அழைப்பதும்
குழுவாக கூடிக் கும்மாளம் பல செய்வதும்
கலை நிகழ்ச்சிகளுக்கு மும்மரமாய் பங்கேற்பதும்
மறக்கமுடியுமா . . .
நாவல்கள் வாசித்து அவற்றை நம்மிடையே பரிமாறுவதும்
கதாபாத்திரங்களின் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்காய் வருந்துவதும் தனியாக ஒரு கொப்பி வைத்து வாசித்தவற்றைக் குறிப்பதும்
விஞ்ஞானத்தில் ஆறாம் பாடத்தில் கரை காண முனைந்ததும்
சந்தேகத்துக்கே இடமின்றி ஆசிரியரிடம் சந்தேகம் கேட்பதும்
கணிதசமன்பாடுகளில் விளக்கங்கள் பல நாமேயுருவாக்குவதும் மறக்கமுடியுமா . . .
விடுமுறையன்று தண்ணீரில் ஒருவரை ஒருவர் நனைப்பதும்
பிரபல்யமான பாடல்களுக்கு நடனங்கள் பல ஆடி மகிழ்வதும்
பரீட்சைக்கு படிப்பதை விடுத்து ஆட்டோகிராப் எழுதியதும்
வரும் ஆசிரியர்களை புனை பெயரிட்டு ஒரு வழி ஆக்குவதும்
மாமா, மாமி என சில ஆசிரியர்களை உறவுடன் அழைத்ததும்
மச்சாள், மச்சி, அண்ணா, அண்ணி என நம்முள்ளேயே உறவாடியதும்
மறக்கமுடியுமா . . .
மின்விசிறி ஆழியின் கீழ் விளக்கம் எழுதியதும்
மற்றோருடன் பரிமாறி, பறித்து உணவு அருந்தியதும்
இடைவேளைக்கு முன்பே களவாக கான்டீன் செல்வதும்
விளையாட்டுப் பழகப் போகையில் வெருளு வாங்குவதும்
போஸ்டரில் "அலைபாயுதே" மாதவன் பார்த்து மகிழ்ந்ததும்
அர்த்தமே இல்லாது சில பல ரகசியங்கள் பரிமாறியதும்
மறக்கமுடியுமா . . .
Subscribe to:
Post Comments (Atom)
"விடுமுறையன்று தண்ணீரில் ஒருவரை ஒருவர் நனைப்பதும்..."
ReplyDeleteஇதுக்கு vicy ட்ட நாங்க வேண்டின ஏச்சு, இப்பையும் மறக்க ஏலாது..
சாரதா
ReplyDeleteஅந்த ஏச்சு பேச்சுக்கெல்லாம் அளவு கணக்கிருக்கா என்ன??? ;-)
அதைப்பற்றி எப்ப நாங்க feel பண்ணி இருக்கிறம் ;-)