Friday, May 7, 2010

என் பிரியமான சிநேகிதியே ...




என் பிரியமான சிநேகிதியே ...
இதோ ரயில் நிக்க போகிறது....
நான் இறங்க போகிறேன்..
நாம் மீண்டும் பிரிய போகிறோம்..சந்திக்காமலேயே .....



என்னுடைய வானத்தில்
என்றோ தொலைந்து போன
ஒரு நட்ச்சத்திர பூவொன்று
இன்று ரயிலின் யன்னலோரம்....
என் வாழ்க்கை பயணத்தின்
எதோ ஒரு நிறுத்தத்தில் ஏறி
எதோ ஒரு நிறுத்தத்தில் இரங்கி போய் விட்ட
உன் எழில் முகத்தை
என் இதயத்தில் பதிந்துள்ள
உன் நட்பு முகத்தோடு ஒப்பிடு பார்க்கிறேன்....

உதடுகளோடு சேர்ந்து
கண்களும் சிரிக்கும்
அந்த ஊமைஜ்சிரிப்பு
நீ ஷந்தோஷித்திருப்பதை
நிஜயபடுத்துகிறது
அன்று என்னோடு
நட்பாய் சேந்து இருந்திருந்த உன் கைகளில்
இன்று காதலோடு கை கோர்த்து இருக்கும்
உன் கணவனை கண்டு களிப்படைகிறேன்
நீயே என்னை
கவனிக்காமல் போனாலும்
உன் குஞ்சு குழந்தை
என்னை பார்த்து
நட்பாய் சிரிக்கிறது
ஓ உன் ரத்தம் அல்லவா ....
தட தடத்து ஓடிக்கொண்டு இருக்கும்
ரயிலின் சத்தத்தையும் தாண்டி
உன் உதடுகள் அன்று
உச்சரித்த அந்த நட்பின் வார்த்தைகள் என்னுள்ளே
ஒலித்து கொண்டே இருக்கிருக்கின்றன ......
ஜன்னல் காற்று
உன் கூந்தல் கலைத்து
என்னுள்ளே சங்கமிக்கும் போது
நம் நட்பின் அழகிய அந்த பழைய வாசனையை
சுவாசிகின்றேன்.........
என் பிரியமான சிநேகிதியே ...
இதோ ரயில் நிக்க போகிறது
நான் இறங்க போகிறேன்
நாம் மீண்டும் பிரிய போகிறோம்
சந்திக்காமலேயே .....
போய் வருகிறேன்
என்றோ ஒருநாள் மீண்டும்
எங்காவது சந்திப்போம்
என்ற சந்தோசத்தோடும்
உன் நினைவுகள்
ஏற்றி வைத்த உன் நட்பு சுமையோடும்
இறங்க போன எனக்கு
உன் குழந்தை சிரித்து கொண்டே பறக்கவிட்டது முத்தத்தை ...
நெஞ்யில் நிரப்பி கொண்டு
அதே பழைய நட்பின் நினைவுகளை சுமந்து
இறங்கி போகிறேன் .


குறிப்பு :- எங்கோ படித்ததில் பிடித்ததை உங்களோடு பகிர்கிறேன் இங்கே . . .

1 comment: