Saturday, February 6, 2010

பந்தாடப்பட்ட Prefects . . .


மாணவர்களுக்கோ கட்டுப்படுத்தப்படுவது பிடிப்பதில்லை
அதிபர், ஆசிரியர்களோ கட்டுப்பாடு தேவை என்பார்கள்
இருதலைக் கொல்லி எறும்புகளாய் இந்த இரு பிரிவினருக்கும்
நடுவே பந்தாடப்பட்டதோ Prefects நாம் தான் . . .

எந்த வகுப்பை மேய்ப்பதும் கடினம் - அதிலும்
எமது நண்பர்களின் வகுப்பை மேய்ப்பது உலகமகா கஷ்டம்
எம் கஷ்டம் அவர்களுக்கோ வெகு வெகு இஷ்டம் . . .

வந்தவுடனேயே "வந்து விட்டாயா வா" என நக்கல் பார்வைகள்
அமைதியாகச் சொல்கையில் தாம் பேசவில்லையாம் வாயால்
என போக்குக் காட்டி விட்டு கண்ணாலும், சிரிப்பாலும் ஒரு
சரித்திரமே படைப்பார்கள் நம் முன்னே மிக இலகுவாய் . . .

இதற்கும் அஞ்சிடாது எம் கடமையைப் பார்க்கத் துணிகையில்
அன்பாய் தான் காட்டுவார்கள் தாம் எம் எதிரிகள் என்று
என்ன இது அன்பான ஆபத்தெனப் பார்க்கையில் . . .

ஓரொருவர் பட்டியிலே ஊசி, கூந்தலிலே ரப்பர் பேண்ட்,
காலணியில் வெண்மைக் குறைவு, சீருடையோ குட்டை,
இரண்டாய்ப் பிடித்துக் கட்டாத நீளக் கூந்தல்,
வெட்ட மறந்து நீளமாய் வளர்ந்த நகங்கள் . . .

இப்போது கூறுங்கள் யார் பாவப்பட்டவர்கள் . . . ? ? ?
Prefects பிடிக்காதவர்களா . . . ? ? ?
அன்றி பாவப்பட்ட Prefects கூட்டமா . . . ? ? ?

Thursday, February 4, 2010

மறக்க முடியுமா . . . II


ஐந்தாம் வகுப்பில் கிரிக்கெட் ஆடியதும்
பேட் ஆகப் புத்தகங்கள் பாவித்ததும்
ரேணுகா மிஸ் பந்துகள் பறித்து வைத்ததும்
Dharshanன் கண்ணாடி நொறுங்கிப் போனதும்
மறக்க முடியுமா . . .

ஆறாம் வகுப்பில் கபடி ஆடியதும்
அதற்காய் டேபிள் பெஞ்ச் ஒதுக்கியதும்
சீருடைப் பட்டி தனியே கழன்றதும்
யாரேனும் வந்தால் நிலத்தில் ஒளிந்ததும்
மறக்க முடியுமா . . .

மாதத்துக்கொரு முறை வகுப்பாய்ப் பூசை செய்ததும்
விஜயதசமிக்கு வண்ணப் பட்டாம் பூச்சிகளாய் வந்ததும்
சிவராத்திரி போட்டிக்கு நாடகம், நாட்டியம் பழகியதும்
கந்தசஷ்டிக்கு ஒன்றாய்ப் பாரணைச் சோறு உண்டதும்
மறக்க முடியுமா . . .

Wednesday, February 3, 2010

மறக்க முடியுமா . . .


ஊடல்களின் போது இரு வேறு அணிகளாய்ப் பிரிவதும்
சிறு காகிதத்தில் உள்ளக் குமுறல்களை கிறுக்கி அனுப்புவதும்
கூடல்களில் இனியொரு பிரிவில்லையென சபதமுரைப்பதும்
ஒருவருக்கொருவர் பட்டப் பெயர் வைத்து அழைப்பதும்
குழுவாக கூடிக் கும்மாளம் பல செய்வதும்
கலை நிகழ்ச்சிகளுக்கு மும்மரமாய் பங்கேற்பதும்
மறக்கமுடியுமா . . .

நாவல்கள் வாசித்து அவற்றை நம்மிடையே பரிமாறுவதும்
கதாபாத்திரங்களின் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்காய் வருந்துவதும் தனியாக ஒரு கொப்பி வைத்து வாசித்தவற்றைக் குறிப்பதும்
விஞ்ஞானத்தில் ஆறாம் பாடத்தில் கரை காண முனைந்ததும்
சந்தேகத்துக்கே இடமின்றி ஆசிரியரிடம் சந்தேகம் கேட்பதும்
கணிதசமன்பாடுகளில் விளக்கங்கள் பல நாமேயுருவாக்குவதும் மறக்கமுடியுமா . . .

விடுமுறையன்று தண்ணீரில் ஒருவரை ஒருவர் நனைப்பதும்
பிரபல்யமான பாடல்களுக்கு நடனங்கள் பல ஆடி மகிழ்வதும்
பரீட்சைக்கு படிப்பதை விடுத்து ஆட்டோகிராப் எழுதியதும்
வரும் ஆசிரியர்களை புனை பெயரிட்டு ஒரு வழி ஆக்குவதும்
மாமா, மாமி என சில ஆசிரியர்களை உறவுடன் அழைத்ததும்
மச்சாள், மச்சி, அண்ணா, அண்ணி என நம்முள்ளேயே உறவாடியதும்
மறக்கமுடியுமா . . .

மின்விசிறி ஆழியின் கீழ் விளக்கம் எழுதியதும்
மற்றோருடன் பரிமாறி, பறித்து உணவு அருந்தியதும்
இடைவேளைக்கு முன்பே களவாக கான்டீன் செல்வதும்
விளையாட்டுப் பழகப் போகையில் வெருளு வாங்குவதும்
போஸ்டரில் "அலைபாயுதே" மாதவன் பார்த்து மகிழ்ந்ததும்
அர்த்தமே இல்லாது சில பல ரகசியங்கள் பரிமாறியதும்
மறக்கமுடியுமா . . .

Tuesday, February 2, 2010

பள்ளிக்கூட குறும்புகள்



காலை வேளை பால்கனி அரட்டையும்...
சேர்ந்து பாடிய தேவாரங்களும்...
பாட நேரம் உண்ட உணவும்...
சத்தம் போட்டு வாங்கிய punishment உம்...

விரும்பி படித்த தமிழ் இலக்கியமும்...
வெறுத்து விலக்கிய English Literature உம்...
Commerce Classசின் "இஷ்" சத்தமும்...
முதல் முதல் கட்டிய தாவணி சேலையும்...

"ஆப்பத் தலையும் " "தும்புத் தடியும் "
"கமகே மிஸ் சும் " "grandmaவும் "
Princyயும்...vicyயும்...
பிடிக்காத Prefect Guild உம்...

மாதவனும்.. கோயில் காசும் ...
Bell அடிக்கும் அஜித் குமாரும்...
Seylan Bank கும் ... செய்த கூத்துக்களும்
வெள்ளிகிழமை "ரமண" விஜயமும்...

Bio - Class இல் திருடிய பெஞ்ச்சும்...
தில்லையிடம் இருந்து தப்பிய விதமும்...
"செம்மறிகள்" என்று வாங்கிய ஏச்சும்...
"பொம்பளை - ரவுடிகள் " என்ற வசையும்...

ப்ரீ பாட நேரமும் அட்டித்த லூட்டியும்...
எக்ஸாம் முடிந்த பின் போட்ட பைலாவும்...
ஒளித்து வைத்து ஆடிய கார்ட்ஸ்சும்...
கேசவன் sir ரிடம் மாட்டி முழித்ததும்...

எண்டமூரியின் பனி மலையும்...
ரமணிச்சந்திரனின் மாலை மயங்குகின்ற வேளையும்...
பொன்னியின் செல்வனும்... கடல் புறாவும்...
Barbara Carlton இன் "Mask of the love"வும்...

வாசித்த புத்தகங்களும் ... எழுதிய விமர்சனங்களும் ...
புனைந்த கவிதைகளும் ... புதிய கண்டுபிடிப்புகளும் ...
ஆராய்ச்சி செய்த அற்புத விடயங்களும்...
கேட்டுத்தெளிந்த சந்தேகங்களும்... விளங்காதிருந்த சங்கதிகளும்...

இதய இராகமும்... நேற்றைய காற்றும்...
இறுதி பிரிவில் விட்ட கண்ணீரும்...
நினைத்துப் பார்கையில் நெஞ்சம் சிலிர்க்கிறது...
விழியின் ஓரம் ஈரம் கசிகிறது...