Sunday, January 31, 2010

காத்திருக்கிறோம் . . .


ஆண்டுகள் பலவோடினாலும்
வேஷங்கள் பல மாறுபட்டாலும்
தேசங்கள் பல கடந்து போனாலும்
என்றும் நீங்கா நினைவுகளுடன்
காத்திருக்கிறோம் இன்னும் ஒரு பிறப்புக்காய்...
மீண்டும் அந்த வசந்த காலத்தை வாழ்வதற்காய் ...

Friday, January 29, 2010

நட்பும் நாங்களும் . . .

ஒரே வகுப்பில் ஒரே மேசையில் ஒன்றாக அமர்ந்து
படித்தோம், கதைத்தோம், ரசித்தோம்,
விளையாடினோம், விமர்சித்தோம், விவாதித்தோம்
ஊடல் கொண்டோம், கூடலும் கண்டோம்
இன்று ஒரொருவர் ஒரொரு இடத்தில்
வெவ்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளில்
அன்றைய இனிய பொழுதுகளை நினைத்தபடி
நாட்களை நகர்த்துகிறோம் மெதுவே . . .